மத்திய உள்துறை அமைச்சகத்தில் 1,675 காலியிடங்கள் / VACANCY IN IB 2023
ONEINDIA TAMILJanuary 22, 2023
0
இந்திய உளவுத்துறையில் SA/Exe & MTS/Gen எனப்படும் பாதுகாப்பு உதவியாளர் மற்றும் பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்வை (Recruitment to the posts of SA/Exe & MTS/Gen in IB) மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 1,675 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து 10ம் வகுப்பு அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
பாதுகாப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 10.02.2023 அன்று, 27க்கு இருக்க வேண்டும்.
பன்னோக்கு பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரின் வயது வரம்பு 18-25 வருடங்களாக இருக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்
விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mha.gov.in-யில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் முறையில் வரும் ஜனவரி 28ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.02.2023 (23:00).
ஆன்லைன் விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும்.
பணி விவரங்கள், தேர்வுகட்டணம், தேர்வுமுறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவை தொடர்பான விவரங்கள், தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.mha.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.