Type Here to Get Search Results !

மருத்துவ பயனுள்ள பிரியாணி இலையை பயன்படுத்துவது எப்படி? / HOW TO USE BIRIYANI LEAF FOR MEDICAL BENEFITS

  • பிரியாணி இலை அல்லது பிரிஞ்சி இலை என்பது இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள்.
  • உணவின் சுவையை அதிகரிக்கும் பிரியாணி இலை, பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது தமாலபத்திரி, லவங்கப்பத்திரி, பிரியாணி இலை, பட்டை இலை, மலபார் இலை போன்றவை இதன் வேறு பெயர்கள். 
  • உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் இந்த பிரியாணி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கு தெரிவதில்லை. நீரிழிவு நோய் உட்பட பல நோய்களைக் குணப்படுத்த இந்த பிரிஞ்சி இலைகளைப் பயன்படுத்தலாம்.
  • மருத்துவ குணம் நிறைந்த பிரிஞ்சி இலைகளில் பொட்டாஷியம், தாமிரம், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உடலுக்கு நன்மை பயக்கும். இந்த மசாலா நீரழிவு நோய்க்கு சிறந்த தீர்வை தருவதோடு, வேறு சில நோய்களில் இருந்து நிவாரணம் தரும் .
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
  • டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பிரியாணி இலைகள் மிகவும் சிறந்தது. இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், குளுக்கோஸ் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கிறது. 
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பொடி செய்து ஒரு மாதம் காலம் சாப்பிட இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
மூச்சுத் திணறலை குறைக்கும்
  • சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், கண்டிப்பாக பிரிஞ்சி இலைகளை சாப்பிடுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் பிரியாணி இலைகளை போட்டு கொதிக்க வைக்கவும். 
  • பின் இந்த நீரால் ஒரு துணியை நனைத்து மார்பில் வைத்து, ஒத்தடம் கொடுப்பதால் சுவாசப் பிரச்சனை நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
  • பிரியாணி இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது வைட்டமின் ஏ, பி6 மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இந்த வைட்டமின்கள் அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
செரிமானம்
  • பிரியாணி இலை நமது செரிமான அமைப்பையும் பலப்படுத்துகிறது. வயிற்றில் ஏற்படும் வலியையும் இது குணப்படுத்துகிறது. 
  • இதுமட்டுமின்றி, வயிற்று வலி பிரச்சனையில் இருந்தும் டீ நிவாரணம் தரக்கூடியது.
மன ஆரோக்கியம்
  • பிரிஞ்சி இலை மன ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது மிகச் சிலருக்குத் தெரியும். பல காரணங்களால் உங்களுக்கு டென்ஷன் ஏற்பட்டிருந்தால், இரவில் தூங்கும் முன் 2 இலைகளை எடுத்து அதை எரித்து உங்கள் அறையில் வைக்கவும். இதன் புகையை மணப்பது மன அழுத்தத்தை குறைக்கும்.
கொலஸ்ட்ரால்
  • பிரியாணி இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.இது தவிர இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. 
  • அதே நேரத்தில், இதயத்திற்கு நல்லது என்று கருதப்படும் காஃபிக் என்ற கரிம கலவை இதில் காணப்படுகிறது.
பிரியாணி இலையை பயன்படுத்தும் முறை
  • பிரியாணி இலைகளை கொண்டு மூலிகை தேநீர் தயாரித்து குடிக்கலாம். டீயுடன் கலந்தும் குடிக்கலாம். 
  • இதற்கு பிரியாணி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி டீ போல குடிக்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.