Type Here to Get Search Results !

நான்மணிக்கடிகை / NANMANIKATIKAI

  • ஆசிரியர் = விளம்பி நாகனார்
  • ஊர் =விளம்பி
  • 102 பாடல்கள் + 2 கடவுள் வாழத்து பாடல்கள் =104 பாடல்கள்
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை = அறம்
  • இயற்றப்பட்ட காலம் = நான்காம் நூற்றாண்டு
  • நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று, இஃது ஒரு நீதி நூல்.
  • நான்கு அறக் கருத்துகள் - கல்விபயன், வீடு, கொலை, தீது தொல்காப்பியர் குறிப்பிடும் அம்மை வனத்திற்கு உரியது
விளம்பி நாகனார்
  • இதன் ஆசிரியர் விளம்பி என்ற ஊரில் பிறந்த நாகனார் என்ற பெயர் உடையவராக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது அல்லது இவர் ஆற்றிய தொழில் காரணமாக இவர் விளம்பி நாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுவாரும் உளர்.
  • இந்நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப்பாடல்கள் இரண்டும் திருமாலைப்பற்றி இருப்பதால் இவர் வைணவ பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் இந்நூல் வைணவ இலக்கியம் என்றும் கூறுவாறுமுளர்.
  • இவர் பெயரை நாயனார் நயினார் என்று கூறி, இந்நூலில் பல இடங்களில் சமண சமயக் கருத்துகளான பொய்யாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகியவை வலியுறுத்திக் கூறப்படுவதால் இதன் ஆசிரியர் விளம்பி நாகனார் ஒரு சமணர் என்றும் நான்மணிக்கடிகை சமணர்களின் இலக்கியம் என்று கூறுவாரும் உளர்.
  • இக்கருத்தை ஏற்பவர்கள் திருமாலைப்பற்றிய செய்யுட்கள் இரண்டும் இடைச்செருகல் என்று வாதிடுவர்.
  • கி.ஆ.பெ. விசுவநாதன் பதிப்பித்துள்ள மும்மணிகளும் நான்மணிகளும் என்னும் நூலில் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டும் நீங்கலான நூற்றுநான்கு பாடல்களே உள்ளன.
பெயர்க்காரணம்
  • நான்கு + மணி + கடிகை = நான்மணிக்கடிகை
  • கடிகை (அணிகலன் - நகை) = துண்டு, ஆபரணம், தோள்வளை.
  • நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.
  • ஒவ்வொரு பாட்டும் நான்கு மணி மணியாக அறக் கருத்துக்களை கொண்டது.
கடவுள் வாழ்த்து
  • முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
  • கடவுள் வாழ்த்து திருமலைப் பற்றியது.
பொதுவான குறிப்புகள்
  • ஒவ்வொரு பாடலிலும் நாலு கருத்துக்கள் உள்ளன.
  • நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
  • இந்நூல் தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
  • ஜி.யு.போப் இந்நூலின் 7, 100 ஆகிய இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார்.
  • இந்நூலின் மிகப் பிரபலமான அடி = “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”
சிறப்பு பெயர்
  • துண்டு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.