புதினா ஒரு வாசனைப்பொருள் மற்றும் ஒரு வகையான கலப்பினத் தாவரம் ஆகும். இதில் நம் உடலுக்கு தேவையான பல மூலக்கூறுகள் உள்ளன. விட்டமின் ஏ, தயாமின், நிக்கோடினிக் ஆசிட் போன்றவை இதில் அடங்கும்.
புதினா இலைகளை வாயில் போட்டு மெல்லுவதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது.
புதினா இலைகளை பயன்படுத்தி போடப்படும் டீ உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்க வல்லது. புதினா இலைகள் செரிமானக் கோளாறுகளுக்கு நல்ல தீர்வாகும்.
புதினா இலைகளைக் கொண்டு தயாரிக்கபடும் எண்ணெய் தலைவலியை கட்டுப்படுத்துகிறது.
புதினா ஒரு நீர்ச்சத்து
நிறைந்த தாவரம் என்பதால் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து ஆசனவாயில் ஏற்படும் எரிச்சலுக்கு நிவாரணியாக அமைகிறது.
புதினாவில் உள்ள மூலக்கூறுகள் அசைவ உணவுகளை செரிப்பதில் செரிமான மண்டலத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.