TEATIME SNACKS RECEIPE IN TAMIL: ரவை மட்டும் போதும் மொறுமொறுப்பான டீ டைம் ஸ்நாக்
ONEINDIA TAMILMay 03, 2023
0
தேவையான பொருட்கள்
ரவை - 1 1/2 கப்
தண்ணீர் - 3 /4 கப்
பூண்டு - 4
வரமிளகாய் - 5
ஓமம் - 1 /4 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் ரவை நல்ல பொடியாக அரைத்து எடுத்துக் தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
மிக்ஸி ஜாரில் பூண்டு, வரமிளகாயை கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் ஒரு பாத்திரத்தில் பொடித்த ரவை, உப்பு, பூண்டு வரமிளகாய் கலவை, நுணுக்கிய ஓமம், தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து மேலாக ஒரு ஸ்பூன் எண்ணெய் தடவி 10 நிமிடம் நன்றாக ஊறவிடவும்.
10 நிமிடத்திற்கு பின் நன்றாக பிசைந்து 2 பங்காக பிரித்து உருட்டி சப்பாத்தியை தேய்ப்பது போல தேய்த்து விருப்பமான வடிவில் வெட்டி மிதமான தீயில் பொரித்தெடுத்தால் டீ டைம் ஸ்நாக் ரெடி.