Type Here to Get Search Results !

THUTHUVALAI: பாம்பின் விஷத்தை முறிக்கும் & ஆண்மையை அதிகரிக்கும் செடி

THUTHUVALAI

THUTHUVALAI:  தூதுவளை இலையில் கால்சியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே, தினமும் அல்லது வாரம் இரு முறை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படும். 

மேலும், தூதுவளைக் கீரை, வேர், காய், வத்தல், ஊறுகாய் இவற்றில் ஏதாவது ஒன்றை நாற்பது நாட்கள் உட்கொண்டு வந்தால் கண்ணில் ஏற்படும் பித்தநீர் மற்றும் மற்ற கண் நோய்கள் யாவும் நீங்கும். 

உணவுக்குச் சுவை தரும் தூதுவளை இலையின் சாறை, காதில் விட்டால், காதடைப்பு, காதெழுச்சி ஆகியவை குணமாகும். தூதுவளைப் பழங்களை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் மலச்சிக்கல், மார்புச் சளி, இருமல், முக்குற்றங்கள், நீரேற்றம் போகும். 

பாம்பு நஞ்சு தீரும். மேலும் தூதுவளையின் பூவில் ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் உள்ளது. இதன் காய் வாதம், பித்தம், கபம் உள்ளிட்டவைகளை நீக்கும் திறன் கொண்டது. தூதுவளையின் வேரும், கொடியும் இருமல், இரைப்பு உள்ளிட்டவைகளை குணமாக்க உதவுகிறது. 

தூதுவளை இலையுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு அல்லது வத்தல் சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் நுரையீரல் தொடர்பான நோய்கள் நீங்குவதுடன் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

மேலும் மூச்சு விடுவதில் உண்டாகும் சிரமம் குறையும், ஆஸ்துமா நோயாளிகளுக்கு தூதுவளை பெரிதும் உதவுகிறது. தூதுவளை பொடியை தேனில் கலந்து தினமும் காலை, மாலை நேரங்களில் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் தீரும். 

நோய் எதிர்ப்புச் சக்தியும் பெருகும். மேலும், வயிறு மந்தம், வயிறு கோளாறு, வாயுப் பிரச்சனை இருப்பவர்கள் இப்பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிறு பிரச்சனைகள் குணமாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.